ஒன்றிணைவோம்! உளமார மகிழ்வோம்! நன்றே செய்வோம்! வளம்பெறுவோம்!
இதயமுள்ளோரே!
அன்பின் கருமையத்திலிருந்து அனைவரையும் வரவேற்கிறேன்,
கசப்பான, வெறுப்பான, தீமையான இவையனைத்தையும் மறந்திடுவோம்!
எதைத் தேடுகின்றோம்?
அமைதி ஒன்றுதான்,
எதை வேண்டுகின்றோம்?
நலமும், சுகமும்,
எப்போது சந்தோசப்படுகின்றோம்?
சண்டையில்லாமலும், உணவுக்கு அலையாமலும்,
உண்மையாக யாவையும் இருக்கும் போதுதான்
எல்லோரும் பயணத்திலே இருக்கிறோம்,
என்ன செய்வது எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்லி விட்டார்கள்,
இருக்கும் வரை அனுபவிக்க வேண்டுமே!
எதை அனுபவித்து நிறைவு பெற்றீர்கள்?
அரசியல்வாதிகளின் சுயநலம் ஒருபுறம்,
அண்டைநாடுகளின் போர்தூண்டல் ஒருபுறம்,
வானவேடிக்கைப் போன்ற செயற்கைக்கோள்கள்,
வண்ணம் தீட்டிய கைபேசிகள்,
உறவுமுறையில்லா ஒழுக்கக்கேடுகள், கதிர்வீச்சுகள்,
இவற்றின் பேரழுத்தம் நம்மை அமைதியின்மை ஆக்கிவிடுகிறது
அவரவர்கட்கு தோன்றிய அறிவை சந்தையிலே கூறுபோட்டு
வரிந்து கட்டிக்கொண்டு விற்றுக்கொண்டிருக்கிறோம்,
இப்படி பல வழிகளிலே துன்பத்தை பலமடங்கு விதைகளாக்கி விட்டோம்.
எப்படியோ... நானும் உங்களுக்கு தத்துவத்தை சொல்ல இது உகந்தநேரம் போலும்
எண்ணுவோம் - காலத்தினும் பன்மடங்கு பயனுள்ள உயர்ந்தவையை!
செயல்படுத்துவோம் - எல்லா உயிர்களும் சுகமும் நலமும் பெற்றுவாழ!
வணங்குவோம் - உண்மையை, பேருண்மையை, பிரபஞ்சத்தை!
ஒன்றிணைவோம் - யாவையும் இச்சணத்தே பலன்தரவே!
ஏமாறாதீர்கள்...
தனியொருவர் சுதந்திரம் பறிக்காதீர்கள்,
மறவாதீர்கள் என்றும் மன்னிப்பை,
துறவாதீர்கள் என்றும் பொறுமையை.
நலம் பெறுவோம் !!! வளம்பெறுவோம்!!!
~நன்றி~
*(பொழுதை போக்குவது அல்ல பொழுது போக்கு, பொழுதை பயனுள்ளாத ஆக்குவது)