Friday, 25 December 2015

Why Anma Yoga?


உயிர்களின் மகத்துவம்  பிரம்மத்திற்கு  ஈடானது. மாற்றம் என்பதே புனிதம்
       பிரபஞ்சத்தில் வாழும் உயிர்கள், பேரண்ட  ஒழுக்கநியதிக்கு உட்பட்டு வாழ,  பிறர்நலம் பேணி தவப்புருசர்கள் அருளிய யோகக்கலை என்னும் அமுதத்தை, இன்றைய மனிதக்குலம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மதம்சாரா அறிவியல் பேரறிவுடன் ஆன்ம யோகா மையம் தனிநபர்களுக்கு ஏற்றவாறு தகுந்த முறையில் சுவாசப் பயிற்சியும், முத்திரை மகத்துவமும் கற்றுத்தருகிறது. நாட்பட்ட நோய்களிலிருந்து குணம்பெறவும், மனஅமைதி பெறவும்  குருவின் மேற்பார்வையில் நன்குபயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்றுத்தரப்படும் யோகக்கலை, மிகச்சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
       இன்று தவறான வாழ்க்கை முறை, உணவு முறையைப் பின்பற்றுவதால் வருகின்ற நீரிழிவு, ஆஸ்துமா, சருமநோய், முடக்குவாதம், கீல்வாதம், நாள்பட்ட தலைவலி, ஜீரணக் கோளாறு, நாளமில்லா சுரப்பி குறைபாடு, பெண்களின் மாதவிடாய் பிரச்சினை, உடல் பருமன், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், புகையிலை மற்றும் மது பழக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு போன்ற பல நோய்களுக்கு இங்கு தீர்வு அளிக்கப்படுகிறது. உணவு உண்ணும் முறை பற்றிய விழிப்புணர்வு அளிப்பது சிறப்பம்சம்.

No comments:

Post a Comment